இன்றைய நாள் துரதிஸ்டமானதாக மாறிவிட்டது: மகிந்த கவலை


இன்றைய தினம் வரலாற்றில் துரதிஸ்டவசமான ஓர் நாள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

ஜே.ஆர்.ஜயவர்தன அபகீர்த்தியான இந்திய இலங்கை உடன்படிக்கையை ஜூலை 29ம் திகதி கைச்சாத்திட்டார். இன்று அவரது மருமகன் ரணில் விக்ரமசிங்கவும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் பல தலைமுறைகள் கனவு கண்டன. அதிஸ்டவசமாக எமக்கு அந்தக் கனவை மெய்ப்படச் செய்ய முடிந்தது.

உரிய முகாமைத்துவத்தின் அடிப்படையில் லாபமீட்டக்கூடிய ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

அரசாங்கம், நாட்டின் முக்கிய சொத்துக்களை நட்டமடையச் செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வழிமுறை ஒன்றை பின்பற்றி வருகின்றதென குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Comments