தொல் பொருள் திணைக்களத்தினை உடனடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரவேண்டும்..
தொல் பொருள் திணைக்களத்தினை உடனடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரவேண்டும் என ஞானசார தேரர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேர்வுக்கு எதிர்த்தரப்பு சாட்சிகள் பற்றிய விபரங்கள் தரப்படவில்லையெனக் காரணங்கூறி வழக்கு விசாரணையை தள்ளிப் போடும்படி மனு ஒன்று முன் வைக்கப்பட்ட நிலையில் இன்று உயர் நீதி மன்றுக்கு விஜயம் செய்த அவர் ஊடககங்களுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
நாட்டில் அழிக்கப்பட்டுவரும் தோல் பொருள் சம்பந்தமாகவும் மற்றும் பௌத்தர்களின்
பிரதான பிரச்சினைகள் தொடர்பிலும் பௌத்த பீடங்கள் கண்ணை திறந்துள்ளமை தொடர்பில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .
ஆனால் தொல் பொருள் தொடர்பில் எந்த அறிவும் இல்லாதவர்களுக்கு அதனை பரிபாலனம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.தொல் பொருள் திணைக்களத்தினை உடனடியாக ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரவேண்டும் அல்லது அது தொடர்பில் பூரண அறுவுள்ள ஒருவருக்கு அந்த திணைக்களம் கையளிக்கபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


Comments
Post a Comment