டாக்டர்கள் முன்னெடுத்த போராட்டம் இன்று மாலை கைவிடப்பட்டது


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (25) காலை 8.00 மணிக்கு ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் டாக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

Comments