தம்புள்ளை மோட்டார் சைக்கிள் விபத்தில் முஹம்மட் சுஹைல் வபாத்.


தகவல் நளீம் -

தம்புள்ளை விபத்தில் கதுருவெல,மாணிக்கம் பிட்டி முஹம்மட் சுஹைல் வபாத்.

மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்ய கண்டி நகருக்குச்சென்று வீடு திரும்புகையில் இனாமலுவ எனும் இடத்தில் சோகம்.

குறித்த விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான முஹம்மட் சுஹைலும் அவரின் நண்பரும் தம்புள்ளை அரச வைத்திய சாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று பகல் சிகிச்சை பலனின்றி முஹமட் சுஹைல் காலமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 இதே வேளை விபத்தில் காயமடைந்த  இவரின் நண்பர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி அரச வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Comments