ஜனாதிபதி எம்மை ஏமாற்றினாரா? – பெற்றோலிய தொழிற்சங்கங்கள் கேள்வி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை ஏமாற்றினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பெற்றோலிய வளத்துறை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும், நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்தாகியுள்ளது.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஜனாதிபதி தம்மை பிழையாக வழிநடாத்தியுள்ளதாக அறியமுடிகின்றது. இது குறித்து ஜனாதிபதிக்கு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் அச்சங்கங்களின் ஒன்றிய ஏற்பாட்டாளர் டீ.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 01 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைகளை வைத்தே தமது அடுத்த கட்ட தீர்மானங்கள் அமையவுள்ளதாகவும் ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment