ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு: இன்று காலை கைச்சாத்திடப்படவுள்ள உடன்படிக்கை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சில் இன்று காலை 10 மணியளிவில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment