நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது
யாழில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார்
இன்று அதிகாலை 2.30 மணியளவில் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கி பிரயோகத்தில் அவரது வயிற்று பகுதியில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெற்றுள்ளது.
அவரது வயிற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் உடலின் உட்புறத்தில் அதீத இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாக பிரேத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 57 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர உயிரிழந்துள்ளார். அவர் நீதிபதி இளஞ்செழியனின் 17 வருட மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment