மோரட்டுவயில் மோதல், ஒருவர் பலி


மொரட்டுவ ரயில் நிலையத்துக்கு செல்லும் பாதைக்கு அருகில் இன்று (21) பிற்பகல் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னரே அது மோதலாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஒருவர் மற்றவரைத் தள்ளிவிட்டதனால்,  சுவரில் மோதுண்டு ஏற்பட்ட காயத்தினாலேயே இவ்வுயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

50 வயதுடைய ஒருவரே இம்மோதலில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Comments