மருதமுனை புலவர் மணி சரிபுத்தீனின் பேரன் நிலாவெளி கடலில் மூழ்கி வபாத்

(ஜெஸ்மி எம்.மூஸா)

திருகோணமலை-நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்; ஒருவர் நீரில் மூழ்கி மரணமான சம்பவமொன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது

மருதமுனை கஸ்ஸாலி வீதியில் வசித்து வந்த புலவர் மணி சரிபுத்தீனின் பேரனான நிதீஸ் மஃமூட் (23) என்பவரே மேற்படி சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்

குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கிய தன் சகோதரனான நுஸைர் என்பவரைக் காப்பாற்றச் சென்ற போதே மேற்படி இளைஞர் மரணமடைந்துள்ளார்

ஜனாஸா நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் காப்பாற்றப்பட்டவர் அதே வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சகோதரர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments