எனக்காகவே ‘புதிய’ சட்டம் தயாரிக்கிறார்கள்: மஹிந்த
Ihzana Fareed
முன்னாள் ஜனாதிபதியான தனக்கெதிராக வழக்குப் பதிவு செய்யும் வகையில் புதிய சட்டமூலம் உருவாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
இதன் மூலம் தன்னையும் பாதுகாப்புத் துறையில் பணியாற்றிய முக்கிய நபர்களையும் நீதிமன்றில் நிறுத்தக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்படுவதாகவும் வெளிநாட்டுத் தலையீட்டை அதிகரிக்கவும் அரசாங்கம் செயற்படுவதாகவும் மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் வைத்தே மஹிந்த இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Comments
Post a Comment