லன்ஷ் சீட் மற்றும் சொப்பின் பேக் பாவனைக்குத் தடை
லன்ஷ் சீட், சொப்பின் பேக் மற்றும் ரிஜிபோமிலான சாப்பாட்டுப் பெக்கெட்களுக்கு தடை விதிக்கப்போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய மெல்லிய பொலித்தின்களைத் தடை செய்வது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி, தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
சொப்பின் பேக் மற்றும் லன்ஷ் சீட்களின் பயன்பாட்டினால், சுற்றாடலுக்கு பாரிய தீங்கு ஏற்பட்டுள்ள போதிலும், அவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, அரசாங்கத்துக்குரியது என, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment