பாணந்துறை பள்ளி கடைகள் தாக்குதல்
பிக்கு உட்பட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பாணந்துறை எலுவில பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட ஐவருக்கு இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது கடந்த மே மாதம் நடுப்பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த தாக்குதலை நடத்-தியவர்களை வெவ்வேறு நாட்களில் குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்-தனர். கைதான நால்வரில் பொதுபலசேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்ட பெளத்த தேரர் ஒருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் நிலை-யத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment