தௌபிக் மூதூர் வேதத்தீவுக்கு விஜயம்.
திருகோணமலை மூதூர் வேதத்தீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கும் முகமாக வேதத்தீவு பாலம் அமைப்பது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபிக் மற்றும் பொறியியலாளர் குழு சகிதம் அளவெடுத்தல் பணிகளை மேற்கொள்வதற்காகஇன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் சென்று அங்குள்ள பகுதிகளின் செயற்பாடுகளை கேட்டறிந்தார்கள்.
மூதூர் வேதத்தீவு மக்களின் தொடர் பிரச்சினைகள் தொடர்ந்தும் இருந்து கொண்டே வருகின்றது ,இப்பிரதேசத்தில் யானை வேலி அமைத்தல், வீதி விளக்குகள் பொருத்துதல், குழாய் நீர் பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டதோடு அப்பிரதேச மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.


Comments
Post a Comment