இன்ஸ்பெக்டரிடமே லஞ்சம் வாங்கி சிக்கிய கான்ஸ்டபிள்...


கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் 20,000 ரூபா இலஞ்சம் பெற்ற அதே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலுக்கு அருகில் வைத்து இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் சமயத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் பொலிஸ் காண்ஸ்டபில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சுற்றாடல் பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக சீன நிறுவனம் ஒன்றினால் பொலிஸ் தலைமையகத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டை சீன நிறுவனத்திடம் கூறி திரும்ப பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்வதாக கூறி இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

இது சம்பந்தமான வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட போது சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Comments