மக்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகள் சேர்ந்து அமைக்கும் முஸ்லிம் கூட்டமைப்பினால் எந்தவித அரசியல் மாற்றமும் ஏற்படப் போவதில்லை. பொறியியலாளர் நாபீர்

Ihzana Fareed

மிக விரைவில் ஒரு தேர்தலை சந்திக்கவுள்ள மக்கள் இன்று அரசியல் ரீதியில் பல்வேறு தேவைகளுடன் இருப்பதை கண்டு மீண்டும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு சிலர். அதிகாரத்துக்கு வருவதற்கு முஸ்லிம் கூட்டமைப்பு என்ற மந்திரத்துடன் களமிறங்கும் நிலை காணப்படுவதாக சமூக சேவைகள் அமைப்பான நாபீ பெலண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தெரிவிக்கின்றார். 

மேலும் தனது கருத்தினை தெளிவு படுத்திய உதுமான்கண்டு நாபீர்…இதனை உற்று நோக்குகின்ற போது இந்த மந்திரத்தை ஓத விளைகின்ற அனைவரும் மக்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள். இவர்களால் எந்த விடயத்தையும் சாதித்துக் காட்ட முடியாது. மீண்டும் அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றி விட்டு வழமை போன்று மக்களை நட்டாற்றில் விடுவதற்கே இவர்கள் முனைகின்றார்கள். 

மாறாக இதய சுத்தியுடன் இவர்கள் முஸ்லிம் கூட்டமைப்பை ஆரம்பிப் பார்களாக இருந்தால் அதற்கு முழு ஆதரவினை நாம் வழங்குவோம். ஆனால் இதய சுத்தியுடன் இவர்கள் ஒன்று சேரவுமில்லை. முஸ்லிம் கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவும் வரப் போவதுமில்லை. நாபீர் பெளண்டேசன் ஊடாக மக்கள் மனங்களில் இடம் பிடித்து சேவை செய்து வருகிறோம்.

 எதிர்தாலத்தில் பல்வேறு வியூகங்களுடன் மக்கள் அதிகாரத்தை நாடி அரசியலில் இறங்குவோம். வேட்பாளர்களாகவும் படித்த, பண்புள்ள சிறந்தவர்களை இனங்கண்டு களமிறக்கவுள்ளோம். எமது அமைப்பில் நம்பிக்கை வைத்து அம்பாரை மாவட்டத்தில் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்திலும் மக்கள் ஆதரவு எமக்கு பெருகி வரு கின்றது. எமது அமைப்பு தனித்து நின்றே அரசியலில் சாதித்துக் காட்டும். எதிர்காலத்தில் நாம் அரசியல் ரீதியில் பல்வேறு சாத்திய மாற்றங்களை ஏற்படுத்துவோம் எனும் தகவலினையும் மக்களுக்கு எத்திவைப்பதாகவும் தெரிவித்தார்

Comments

  1. சரிந்து போயுள்ள வாக்கு வங்கியை
    சரியாது முண்டு கொடுக்க முனையும்
    சரிவான சதிவலையே முஸ்லிம் கூட்டு
    அறிவாரே மக்கள் தெரிவாரோ உம்மை
    நரியாரே தந்திரம் பலியாது புரிவீரே!

    ReplyDelete

Post a Comment