அளுத்­கம விவகாரம் பிரதமர் ரணில் கூறியது அப்பட்டமான பொய்யே


முஸ்லிம் எம்.பி.க்கள் மறுதலிக்காதது ஏன் ?ந.தே முன்னணி தவிசாளர் அப்துர் ரஹ்மான்

அளுத்­கம வன்­மு­றை­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்­டு­விட்­ட­தா­கவும் நீதி நிலை­நாட்­டப்­பட்­டு­விட்­ட­தா­கவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இது ஒரு அப்­பட்­ட­மான பொய் மாத்­தி­ர­மின்றி மக்­களின் பொதுப் புத்­தி­யினை அவ­மா­னப்­ப­டுத்­து­கின்ற செய­லு­மாகும். பொறுப்­பற்ற இந்த கருத்­தினை பாரா­ளு­மன்­றத்­தி­லேயே மறு­த­லித்து கண்­டித்­தி­ருக்க வேண்டும். எனினும் , நமது  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இதனை செய்­ய­வில்லை என நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சாளர் பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார். 


இந்­நாட்டு மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பதை புறக்­க­ணித்துவிட்டு ஆடம்­ப­ர­மான செல­வு­களை மாத்­திரம் செய்­வ­தற்கு அர­சாங்கம் காட்­டி­வரும் ஆர்வம் தொடர்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே  இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியின் தவி­சா­ளரின் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,பாதிக்­கப்­பட்ட மக்கள் நிவா­ர­ணங்கள் எதுவும் கிடைக்­காமல் பல வரு­டங்­க­ளாக தவிக்கும் நிலையில் அதே மக்கள் செலுத்தும் வரிப்­ப­ணத்தில் ஆடம்­ப­ரங்­களை அனு­ப­விக்க முனை­வது ஒரு நம்­பிக்கைத் துரோ­க­மாகும். மட்­டு­மின்றி அப்­பட்­ட­மான ஒரு மக்கள் விரோத செய­லு­மாகும்.

கடந்த அர­சாங்­கத்தின் போது உரு­வா­கிய இன­வாத நட­வ­டிக்­கை­களின் உச்­சக்­க­ட்­ட­மாக அளுத்­கம கல­வரம் இடம்­பெற்­றது. பல கோடி ரூபா பெறு­ம­தி­யான முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வீடு­களும் உைட­மை­களும் தீக்கிரை­யாக்­கப்­பட்­டன. இரண்டு முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டனர். இன்னும் பல பேர் காயப்­ப­டுத்­தப்­பட்­டனர்.  இந்த அநி­யா­யங்கள் தொடர்பில் நீதியை நிலை நிறுத்­தி உரிய நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கு கடந்த அர­சாங்கம் எதுவும் செய்­ய­வில்லை.

எனவே, ஒரு ஆட்சி மாற்­றத்தின் மூல­மா­க­வேனும் தமக்­கு­ரிய நீதியும், நிவா­ர­ணங்­களும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மக்கள் ஆத­ரவு வழங்­கி­னார்கள். அதனைச் செய்­வ­தா­கவே இந்த அர­சாங்­கமும் வாக்­கு­றுதி வழங்­கி­யது.
அளுத்­கம கல­வரம் நடந்து முடிந்து மூன்று வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்தக் கல­வ­ரத்­திற்குப் பின்­ன­ணியில் இருந்த சூத்­தி­ர­தா­ரிகள் தொடர்பில் ஏரா­ள­மான பொலிஸ் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டன. இவை­யெ­தற்கும் எந்த நட­வ­டிக்­கை­களும் இது வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட இந்தக் கோடிக்­க­ணக்­கான இழப்­பு­க­ளுக்கும் எந்­த­வொரு நஷ்­ட­ஈட்­டையும் இது­வரை அர­சாங்கம் வழங்­க­வில்லை. பல வகை­யான நிதி ஒதுக்­கீ­டு­க­ளுக்கு கடந்த சில மாதங்­களில் அமைச்­ச­ர­வையின் விசேட அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனால் அளுத்­க­மயில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு எந்­த­வொரு அமைச்­ச­ரவைப் பத்­தி­ரங்­களும் சமர்ப்­பிக்­கப்­பட்­ட­தனை காண­மு­டி­ய­வில்லை.  இது தொடர்பில்  முஸ்லிம் அமைச்­சர்­களும் தமது அடிப்­படை கட­மை­யினை செய்­வ­தற்கு தவ­றி­யி­ருக்­கி­றார்கள்.

இந்­நி­லையில் அளுத்­கம மக்­க­ளுக்­கான நஸ்டஈடு வழங்­கப்­பட்­டு­விட்­ட­தா­கவும் நீதி நிலை­நாட்­டப்­பட்­டு­விட்­ட­தா­கவும் பிர­தம மந்­திரி பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தார். இது ஒரு அப்­பட்­ட­மான பொய் மாத்­தி­ர­மின்றி மக்­களின் பொதுப் புத்­தி­யினை அவ­மா­னப்­ப­டுத்­து­கின்ற செய­லு­மாகும். பொறுப்­பற்ற இந்தக் கருத்­தினை பாரா­ளு­மன்­றத்தி­லேயே மறு­த­லித்து கண்­டித்­தி­ருக்க வேண்டும். எனினும், நமது  முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இதனை செய்­ய­வு­மில்லை.

இது இப்­ப­டி­யி­ருக்க, அமைச்­சர்­க­ளுக்கு ஆடம்­பர வாக­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு பல­கோ­டி­ரூபா நிதி ஒதுக்­கீட்டை வழங்க அர­சாங்கம் மீண்டும் ஒரு முறை முயற்­சிக்­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் நிவா­ர­ணங்கள் எதுவும் கிடைக்­காமல் பல வரு­டங்­க­ளாக தவிக்கும் நிலையில் அதே மக்கள் செலுத்தும் வரிப்­ப­ணத்தில் ஆடம்­ப­ரங்­களை அனு­ப­விக்க முனை­வது ஒரு நம்­பிக்கைத் துரோ­க­மாகும் மட்­டு­மின்றி அப்­பட்­ட­மான ஒரு மக்கள் விரோத செய­லு­மாகும்.

அர­சாங்கம் என்­பது மக்­களால் அந்த மக்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. அந்தக் கட­மையை செய்­வார்கள் என்ற நம்­பிக்­கையின் அடிப்­ப­டை­யில்தான் மக்கள் தமது ஆணையை வழங்­கு­கி­றார்கள். அந்த அடிப்படை நம்பிக்கைக்கு துரோகமிழைக்கும் வகையில் இந்த அரசாங்கமும் நடந்து கொள்ள முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். 

எனவே, மக்களின் பணத்தை தமது அற்பத்தனமான ஆடம்பர நோக்கங்களுக்குப் பயன்படுத்துகின்ற மக்கள் விரோத செயற்பாட்டை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும். அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஏனைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முறையான நஷ்டஈடுகளை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments