பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான திட்டமிடல்கள் அவசியம்
நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையான திட்டமிடல்கள் அவசியம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஹங்குராங்கொத்த பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;
“நாட்டில் முறையான திட்டமிடலுடன் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றால் பல பிரச்சினைகளை இலகுவாகத் தீர்க்க முடியும். தற்போது மாணவர்களை வேண்டுமென்றே தேவையற்ற விதங்களில் போராட்டங்களில் ஈடுபடுத்துவதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன.
இவற்றிற்கு முறையான திட்டமிடலுடன் அவர்களுக்கான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்” என அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.


Comments
Post a Comment