மாளிகையில் குடியேறும் முன்னர் விசேட யந்திரங்களை புதைத்த மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மாளிகையில் குடியேறும் முன்னர் விசேட பாதுகாப்பு இயந்திரங்களை மண்ணில் புதைத்ததாக அவரின் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
வாஸ்து சாஸ்திரப் பிரச்சினை காரணமாக ஜனாதிபதி சிலர் ஜனாதிபதி மாளிகையில் குடியேறுவதை நிராகரித்திருந்ததாக கூறியுள்ள அவர், மாளிகையில் விசேட பாதுகாப்பு இயந்திரங்கள் புதைக்கப்பட்ட பின்னரே, மகிந்த ராஜபக்ச 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் திகதி முதல் மாளிகையில் வசித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாளிகையின் முன் வாசல் கிழக்கை நோக்கி அமைக்கப்பட்டுள்ளமை பிரதான வாஸ்து பிரச்சினை எனவும் சுமணதாச கூறியுள்ளார்.
கொம்ழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மேல் மாடியில் 5 அறைகளும் கீழ் மாடியில் 5 அறைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மாளிகையின் பிரம்ம பாதம் இருக்கும் இடத்தில் பிச்சினைகள் இல்லை.
கடந்த 2006ம் ஜூலை மாளிகையில் குடியேறிய மகிந்த ராஜபக்ச பிரம்ம பாதம் அமைந்துள்ள இடத்திலேயே பால் காய்ச்சினார்.
மகிந்த ராஜபக்ச கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 19ம் திகதி பிற்பகல் 1.27 அளவில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போதிலும் 2006ம் ஆண்டு ஜூலை 21ம் திகதியே ஜனாதிபதி மாளிகையில் குடியேறினார்.
அதற்கு முன்னர் ஆஸ்தான ஜோதிடர் என்ற வகையில் குடியேறுவதற்கு சில சுப நேரங்களை கணித்து கொடுத்ததாகவும் சுமணதாச குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பாட்டியார் மேரி ராணியின் பெரிய சிலை இருந்தாகவும் வாஸ்து படி அது அங்கிருப்பது சரியில்லை என்பதால், அதனை அகற்றி விட்டு புத்தர் சிலை ஒன்றை வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாளிகையின் பலகைகளில் பூசப்பட்டிருந்த பொலிஷ் பூச்சுகள் கூட வாஸ்து சாத்திரத்திற்கு ஏற்றபடி மாற்றப்பட்டன. மாளிகையின் கூரையில் மிகப் பெரிய வாஸ்து குறைபாடுகள் இருக்கவில்லை.
ஜோதிடர் சுமணதாச அபேகுவர்தன வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே மாளிகைக்குள் நிலத்தடி பதுங்கு குழி நிர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment