மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க முஸ்தீபு:
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டது போன்று மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.
மஹிந்த ராஜபக்சவுக்கு இனி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட இடமளிக்கப் போவதில்லையென சு.க பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க அறிவித்துள்ள நிலையில் அவருக்கிருக்கும் குடியுரிமையைப் பறிப்பதற்கான திட்டம் படிப்படியாக அரங்கேற்றப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment