யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளுக்கு இந்­தியா எப்­போதும் உதவும்

- எம்.எல்.லாபிர் -
இந்­திய துணைத்­தூ­துவர் சிறீமான் ஆ.நட­ராஜா
யாழ்ப்­பாண முஸ்­லிம்­க­ளுக்கு இந்­தியா எப்­போதும் உதவும் என யாழி­லுள்ள இந்­திய துணை தூது­வ­ரா­ல­யத்தின் இந்­தியத் துணைத்­தூ­துவர் சிறீமான் ஆ.நட­ராஜா தெரி­வித்தார். 

கதீஜா கல்­லூ­ரிக்­கான புதிய கட்­டிடத் தொகு­திக்­கான அடிக்கல் நாட்­டு­விழா நேற்­றை­ய­தினம் கல்­லூரி அதிபர் ஜான்சி தலை­மையில் இடம்­பெற்­றது, இந்­நி­கழ்­விற்கு பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே இந்­தியத் தூதுவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு மாகாணம் யுத்­தத்தால் முழு­மை­யாகப் பாதிப்­ப­டைந்­தி­ருக்­கின்­றது, யுத்தம் முடி­வ­டைந்­த­வு­டனே நாங்கள் சில அடிப்­ப­டை­யான உத­வி­களை இலங்­கைக்கு வழங்­கி­னோம்.

இப்­போது இரண்டாம் கட்­ட­மாக கல்வி, கலா­சார விட­யங்­க­ளுக்கு நாம் உத­வு­கின்றோம். கல்வி அமைச்­சிடம் நாங்கள் உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக சில பாடா­சா­லை­களைத் தெரிவு செய்து தரு­மாறு கோரிக்கை வி­டுத்தோம்.

அவர்கள் எவ்­வித பாகு­பா­டு­மின்றி ஒரு சில தேவை­யுள்ள பாட­சா­லை­களை எமக்கு சிபா­ரிசு செய்­தார்கள், இங்கு பாட­சா­லைக்கு வந்து பார்க்­கின்­ற­போ­துதான் இது எவ்­வ­ளவு தேவை­யுள்ள பாட­சாலை என்­பதை என்னால் உணர முடி­கின்­றது. ஒரு கட்­ட­டமும் இந்தப் பாட­சா­லையில் இது­வரை நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்லை. எனவே உங்­க­ளுக்கு வழங்­கப்­படும் இந்த உதவி மிகவும் முக்­கி­ய­மா­ன­துவே.

இந்தப் பாட­சாலை பற்றிப் பேசும்­போது வடக்கு மாகா­ண­ச­பையின் உறுப்­பினர் அய்யூப் அஸ்மின் பற்றி கூற­வேண்­டி­யது எனது கடப்­பா­டாகும். அவரைப் போன்ற ஒரு­வரை நீங்கள் பெற்­றி­ருப்­பது சிறப்­பா­னது.

பாடா­சா­லைக்கு பல்­வேறு உத­விகள் தேவை என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்கள். என்னால் இரண்டு விட­யங்­களைத் இவ்­வி­டத்தில் தெரி­விக்க முடியும், ஒன்று இந்தப் பாட­சா­லையின் கட்­டட நிர்­மானப் பணிகள் முடி­வ­டைந்­ததும் முதல் பணி­யாக ஒரு முழு­மை­யான நூல­கத்­திற்குத் தேவை­யான அனைத்தையும் நாம் வழங்குவோம்.

அடுத்து போட்­டோ­கொப்பி இயந்­திரம் தேவைப்­ப­டு­வ­தாகக் கூறி­யி­ருக்­கின்­றார்கள். அதனை நாளைக்கே எங்­க­ளு­டைய அலு­வ­ல­கத்­திற்கு வந்து பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்றும் குறிப்­பிட்டார்.

மேற்­படி நிகழ்­விலே வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்­தையா சர்­வேஸ்­வரன், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான  அய்யூப் அஸ்மின், இம்­மா­னுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், வலயக் கல்விப் பணிப்பாளர் தெய்வேந்திர ராஜா ஆகியோரும் யாழ் முஸ்லிம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர், மாணவிகள், அயல் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  

Comments