பாடசாலை மாணவர்களுக்கு விசேட அனுமதி
டெங்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் நீளமான ஆடைகளை அணிந்து கொள்ள பாடசாலை மாணவ மாணவியருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டெங்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாணவிகள் மற்றும் குறைந்த தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உடலை மூடும் வகையில் ஆடைகளை அணிய அனுமதி வழங்கப்பட உள்ளது.
உடல் பாகங்கள் தெரியும் வகையில் ஆடைகளை அணிந்து கொள்வதனால் நுளம்பு கடிக்கு உள்ளாகி டெங்கு நோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்காலிக அடிப்படையில் இதற்கான தீர்வாக நீளமான ஆடைகளை அணிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
காற்சட்டை அணியும் மாணவர்கள் நீளக் காற்சட்டை அணிந்து கொள்ளவும், கட்டையாக சட்டை அணியும் மாணவியர் கால்களை மறைத்துக் கொள்ளும் வகையில் ஆடை அணியவும் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக விசேட சுற்று நிரூபமொன்று எதிர்வரும் நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment