ரணிலை தோற்கடிக்க பூரண ஆசீர்வாதத்துடன் களமிறங்கும் கோத்தா!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதத்துடன் களமிறக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இதை தெரிவித்துள்ளார்.

தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே களமிறக்கப்படுவார்.

இவர் முன்னாள் ஜனாதிபதியின் பூரண ஆசீர்வாதத்துடன் போட்டியிடுவார்.

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் ரணிலை தோற்கடிக்கும் சக்தி கோத்தபாய. அவரை நாம் களமிறக்கவுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

  1. இந்த நாடும் மக்களும் என்ன பாவம் செய்தனரோ?

    யாரால் இந்த நாடு அழிகின்றது என மக்கள் மைத்திரியை தேர்ந்தெடுத்தார்களோ அந்த மைத்திரியே நாட்டை அழித்தவர்களை நாட்டின் தலைவராக்க முயற்சிக்கிறார் என்ற பயங்கர துரோகம் வேறெதுவாகவும் எது எப்படியோ! றிசாட் குமாரியை வைத்து முகா தலவரைத் திட்டமிட்டு கேவலப்படுத்துவதன் மூலம் அஷ்ரப்பால் கட்டி வளர்க்கப்பட்டு, முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருந்ததை அழித்து அதன் மேல் நின்று தனக்கு மந்திரிப் பதவி ஒன்றைத் தேடிக் கொண்டதை வரலாறு ஒரு போதும் மறக்காது! மக்களும் றிசாட்டை மன்னிக்க மாட்டார்கள்.

    இப்படிக் கூறுவதால் நான் அஷ்ரப் அவர்களை ஆதரிப்பவன் என்றோ, அவரது கொள்கையை ஏற்றவன் என்றோ, றவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவன் என்றோ எண்ணிட வேண்டாம்.

    அரசியல் ரீதியாக அவர்களுடன் மோதி தன் நிலையை உயர்த்தி இருக்கலாம். ஆனால் றிசாட் முழு முஸ்லிம்களுக்கும் அபகீர்த்தியை, அவமானத்தை, தலை குனிவை அப்போது ஏற்படுத்தி தனது இருப்புக்கு அத்திபாரமிட்டார்! முடியாது.

    ReplyDelete

Post a Comment