வாழ்நாளில் ஒருபோதும் போதைக்கு அடிமையா மாட்டோம் : அல் - அமீன் வித்தியாலய மாணவர்கள் சத்தியப்பிரமாணம்.


இதுவரையில் எந்த அரசாங்கமும் தீர்வை வழங்காத நாட்டின் கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிரிந்திவலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ சீலரத்ன நாயக்க தேரர் நினைவு தியான
மண்டபத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று (22) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச உதவிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளின் அடிப்படையில் நவீன
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்கும்
நிகழ்ச்சித்திட்டத்தை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி இன்னும் சில வருடங்களில் குப்பைகள் இந்த நாட்டு மக்களுக்கும் எந்தவொரு எதிர்கால
அரசாங்கத்திற்கும் ஒரு பிரச்சினையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

இன்று குப்பைகள் தொடர்பில் நாட்டில் அனைத்து இடங்களிலும் எதிர்ப்புகள் மட்டுமே உள்ளதாக

குறிப்பிட்ட ஜனாதிபதி முழு நாட்டுக்கும் சவாலான இத்தகைய பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க
முயற்சிக்கின்ற போது எதிர்ப்புகளைப் போன்று தீர்வுகளும் மிகவும் முக்கியமாகும் என்றும்
குறிப்பிட்டார்.

Comments