தந்துரை முஸ்லிம் இளைஞருக்கு நீதி மறுக்கப்படுவது ஏன்?


ஒரு நாட்டில் நீதித் துறையும், சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரி­களும் சுயா­தீ­ன­மாக இயங்க வேண்டும். இதுவே ஜன­நா­ய­கத்தின் உச்ச நிலை­யாகும். ஆனால் இன்று எமது நாட்டில் சட்­டத்தை அமுல் படுத்தும் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேர்­மை­யாக நடந்து கொள்­கி­றார்­களா? நீதி அனை­வ­ருக்கும் சம­மாக நிலை நாட்­டப்­ப­டு­கி­றதா? என்­பது தொடர்பில் விமர்­ச­னங்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன. 

அண்­மையில் நாட்டில் இடம்­பெற்ற நீதி­யுடன் தொடர்­பு­பட்ட இரு சம்­ப­வங்கள் மக்­க­ளி­டையே பல சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்றில் ஒன்று கண்டி மாவட்­டத்தின் கடு­கண்­ணாவைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது முக­நூலில் புத்­த­பெ­ருமான் தொடர்­பாக பதி­வேற்­றிய கருத்­துகள் தொடர்­பான சம்­ப­வ­மாகும். 

அடுத்­தது பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் தொடர்­பு­பட்ட இஸ்­லாத்­தையும், முஸ்­லிம்­க­ளையும் குர்­ஆ­னையும் அவ­ம­திக்கும் வகை­யி­லான வெறுப்பு பேச்­சு­க­ளாகும். 

தந்­துரை சம்­பவம்
தந்­துரை கிரா­மத்தைச் சேர்ந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் புத்­த­பெ­ரு­மானை அவ­ம­திக்கும் வகையில் தனது முக­நூலில் கருத்­துகள் வெளி­யிட்­ட­தை­ய­டுத்து அக்­கி­ரா­மத்தில் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்­டன. பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் முஸ்­லிம்­களின் 9 வீடு­களை தாக்கி சேதப்­ப­டுத்­தி­னார்கள்.

குறிப்­பிட்ட இளைஞன் தனது முகநூல் பதிவில் கருத்­து­களை தனது புகைப்­ப­டத்­துடன் வெளி­யிட்­ட­த­னாலே பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரால் இளை­ஞனை அடை­யாளம் காண முடிந்­தது. இச்­சம்­பவம் கடந்த மே மாதம் 27 ஆம் திகதி மாலை நடை­பெற்­றது. 

மூன்று இளை­ஞர்கள் கைது
இச்­சம்­பவம் தொடர்பில் மூன்று இளை­ஞர்கள் கடு­கண்­ணாவைப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு கண்டி நீதிவான் நீதி­மன்ற நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். புத்­தரை அவ­ம­தித்து தனது முக­நூலில் பதி­வு­களை பதி­வேற்­றிய முஸ்லிம் இளை­ஞரும் முஸ்­லிம்­களின் வீடு­களைத் தாக்கி சேதப்­ப­டுத்­திய பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்கள் இரு­வரும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட மூன்று இளை­ஞர்­களில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு இளை­ஞர்­களும் 14 நாட்­களின் பின்பு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். ஆனால் முஸ்லிம் இளை­ஞ­ருக்கு பிணை மறுக்­கப்­பட்­டது. அவர் தொடர்ந்தும் பிணையில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

முஸ்லிம் இளை­ஞ­ருக்கு பிணை மறுப்பு
புத்­தரை அவ­ம­தித்து முக­நூலில் பதி­வு­களை பதி­வேற்­றிய வழக்கு விசா­ரணை கடந்த 12 ஆம் திகதி புதன்­கி­ழமை கண்டி நீதிவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­றது. முஸ்லிம் இளை­ஞரின் சார்பில் ஆஜ­ரான ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்­டத்­த­ரணி சைனாஸ் மொஹம்மட் சந்­தேக நப­ரான இளை­ஞ­ருக்கு பிணை வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று வாதிட்டார். 

சம்­பந்­தப்­பட்ட இளைஞர் வேறோர் நப­ருடன் மேற்­கொண்ட கருத்­தா­டல்­க­ளுக்கு பதில் வழங்கும் முக­மா­கவே புத்­த­பெ­ரு­மானைப் பற்­றிய கருத்­து­களை பதி­வேற்றம் செய்­துள்ளார். புத்­தரை அவ­ம­திக்க வேண்டும் அல்­லது ஒரு இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க வேண்­டு­மென அவர் தனது கருத்தை பதி­வேற்­ற­வில்லை.

அதனால் இளை­ஞ­ருக்கு பிணை வழங்­கப்­பட வேண்­டு­மென ஆர்.ஆர்.ரி அமைப்பின் சட்­டத்­த­ரணி வாதிட்டார். இளைஞர் தவ­றான அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டே நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். 

இச்­சந்­தர்ப்­பத்தில் நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த கடு­கண்­ணாவை பொலிஸார் பிணை வழங்­கு­வது தொடர்பில் உயர் அதி­கா­ரியே கருத்து தெரி­விக்க வேண்டும் என்று வேண்­டிக்­கொண்­ட­தை­ய­டுத்து நீதிவான் பிணை வழங்­கு­வதை மறுத்து எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு வழக்கு விசா­ர­ணையை ஒத்தி வைத்தார். 

குறிப்­பிட்ட இளைஞன் தொடர்ந்து பிணை வழங்­கப்­ப­டாது கடந்த 45 நாட்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இளைஞன் புத்­த­பெ­ரு­மானைப் பற்றி தன்­னை­ய­றி­யா­மலே ஒரு­வ­ருக்கு பதில் வழங்கும் வகையில் முக­நூலில் பதி­வேற்­றிய கருத்­து­க­ளுக்­காக 45 நாட்­க­ளுக்கும் மேலாக மேலும் 14 நாட்கள் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

இதே­வேளை வரு­டக்­க­ணக்கில் முஸ்­லிம்­களைப் பற்­றியும் இஸ்­லாத்தைப் பற்­றியும் புனித குர்­ஆனைப் பற்­றியும் அவ­தூறு பேசி­வந்த ஞான­சாரர் தேரர் பல பிடி­யா­ணை­க­ளுக்குப் பின்பு நீதி­மன்றில் ஆஜ­ரான போது அவ­ருக்குப் பிணை வழங்­கப்­பட்­டமை தொடர்பில் மக்கள் விசனம் தெரி­விக்­கி­றார்கள். 

ஞான­சா­ர­தேரர் விவ­காரம்
இன­வாதம் பேசி குர்­ஆ­னையும், முஸ்­லிம்­க­ளையும் அவ­ம­தித்­தவர் ஞான­சா­ர­தேரர். அத்­தோடு அவர் நின்று விட­வில்லை. அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் அவ­ம­தித்தார். தூசண வார்த்­தை­களை வெளி­யிட்டார். இவர் நாட்டின் இன­வா­தத்தை தூண்­டு­கின்­ற­மைக்கு எதி­ராக அமைச்சர் ரிசாத் பதி­யூதீன் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி, அன்வர் மன­துங்க ஆகியோர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தனர். 

இவர் நீதி­மன்றில் விசா­ர­ணை­களின் கீழுள்ள வழக்­கு­க­ளுக்கு சமூ­க­ம­ளிக்­காத கார­ணத்­தினால் இரு பிடி­வி­றாந்­து­களும் இருந்­தது. இந்­நி­லையில் தனக்கு உயிர் அச்­சு­றுத்தல் உள்­ளது. என்னை கொலை செய்ய திட்­ட­மிட்­டுள்­ளார்கள் என்று முஸ்­லிம்கள் மீது குற்றம் சுமத்தி தலை­ம­றை­வாக சில வாரங்கள் இருந்தார். 

இந்­நி­லையில் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி அவர் நீதி­மன்றில் சர­ண­டைந்தார். அவர் சர­ண­டைந்­ததைத் தொடர்ந்து அவ­ருக்கு எதி­ராக கோட்டை நீதிவான் நீதி­மன்­றினால் விடுக்­கப்­பட்­டி­ருந்த பிடி­யாணை மீளப்­பெ­றப்­பட்டு பிணை வழங்­கப்­பட்­டது. 

அல்­குர்­ஆனை அவ­ம­தித்து கருத்து வெளி­யிட்­டமை, ஜாதி­க­பல சோனாவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அத்­து­மீறி கலகம் விளை­வித்­தமை தொடர்பில் கோட்டை நீதி­மன்றில் நடை­பெறும் வழக்கு விசா­ர­ணைக்கு அவர் ஆஜ­ரா­கா­மை­யினால் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு பிடி­யாணை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த இரு வழக்­கு­க­ளிலும் பிடி­யாணை உத்­த­ரவு இருந்த நிலை­யிலே அவர் நீதி­மன்றில் ஆஜ­ரானார். பிடி­யாணை மீளப்­பெ­றப்­பட்டு அவர் நீதி­வா­னினால் எச்­ச­ரிக்­கப்­பட்டு எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நீதி­மன்றில் ஆஜ­ராகும் படி உத்­த­ர­வி­டப்­பட்­டது. 

புதுக்­கடை நீதி­மன்றில் ஆஜர்
கோட்டை நீதி­மன்றில் பிணை பெற்ற ஞான­சார தேரர் மீண்டும் கைது செய்­யப்­பட்டு கொழும்பு மேல­திக நீதவான் முன்­நி­லையில்  ஆஜர் செய்­யப்­பட்டார். முன்பு ஐ.சி.சி.பி.ஆர் எனப்­படும் சர்­வ­தேச சிவில், அர­சியல் இணக்ப்­பாட்டு சட்ட விதி­மு­றை­களின் கீழ் இர­க­சிய பாது­காக்­கப்­பட்ட 'பீ 'அறிக்கை ஒன்­றூ­டாக இவ்­வ­ழக்கில் 'பீ 'அறிக்கை சமர்ப்­பித்­தி­ருந்த பொலிஸார் அந்தக் குற்­றச்­சாட்­டு­களை இடை­யீட்டு மனு ஒன்­றி­னூ­டாக மாற்­றி­ய­மைத்­தனர். அதன்­படி பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கட­மைக்கு இடை­யூறு விளை­வித்து அச்­சு­றுத்­தி­யமை தொடர்பில் மாத்­திரம் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து நீதவான் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முதலில் தாக்கல் செய்­யப்­பட்ட சிவில் அர­சியல் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டு­களை பொலிஸார் விலக்கிக் கொண்டு தற்­போது தண்­டனை சட்­டக்­கோ­வையின் கீழ் சில குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.

பிணையை மறுக்க பிணைச்­சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தில் கூறப்­பட்­டுள்ள எந்த விட­யத்­தையும் பொலிஸார் முன்­வைக்­க­வில்லை.  பிணை வழங்க பொலிஸார் எந்த எதிர்ப்பும் இல்லை என்­கின்­றனர். எனவே ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சொந்­தப்­பி­ணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீரப் பிணை­யிலும் செல்ல அனு­ம­திக்­கிறேன் என நீதிவான் அறி­வித்தார்.

ஆனால்,  தந்­துரை இளை­ஞனின் விவ­கா­ரத்தில் பிணை வழங்­கு­வ­தற்கு பொலிஸ் உய­ர­தி­கா­ரியே விருப்­பத்தைத் தெரி­விக்க வேண்­டு­மென பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் நீதி­மன்றில் கூறி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நீதிவான் அதி­ருப்தி 
ஞான­சார தேரர் விட­யத்தில் பொலிஸார் நீதி­மன்­றத்­திற்கு ஏற்­க­னவே வழங்­கிய  'பீ 'அறிக்கை தொடர்பில் நீதிவான் தனது அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளமை பொலி­ஸாரின் நட­வ­டிக்­கை­களை கண்­டிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல இவ்­வாறு திறந்த நீதி­மன்றில் அறி­வித்தார்.

ஞான­சார தேர­ருக்கு எதி­ராக  பொலிஸார் -முதலில்  ஒரு  'பீ ' அறிக்­கையை தாக்கல் செய்­தனர். அந்த  அறிக்­கையை பார்த்த நான் அதிர்ந்து போனேன். நாடே பற்றி எரியும் அள­வுக்கு அச்­சு­றுத்தும் வண்ணம் அதில் குற்­றச்­சாட்­டுகள் இருந்­தன. எனினும் இன்று இடை­யீட்டு மனு ஒன்று ஊடாக புதிய விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன.

அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு விட­ய­மேனும் இதில் கூறப்­ப­ட­வில்லை. நாட்டில் இடம்­பெறும் விட­யங்­க­ளையோ தற்­போது நிலவும் நிலை­மை­யையோ கருத்தில் கொண்டு என்னால் தீர்­மானம் எடுக்க முடி­யாது. நீதி­மன்றில் தெரி­விக்கும் கருத்­து­க­ளுக்கு அமை­யவே தீர்­மா­னிக்க முடியும்.

நாட்டில் இடம்­பெறும் எந்த விடயம் தொடர்­பிலும் பொலி­ஸாரின் அறிக்­கையைக் கொண்டே நீதி­மன்றம் தீர்­மா­னங்­களை எடுக்கும். எனவே பொலிஸார் அது தொடர்பில் தெளி­வாக இருக்க வேண்டும். இவ்­வா­றான ஒரு­வ­ருக்கு ஏன் பிணை வழங்­கி­னீர்கள் என பொது மக்கள் நீதி­மன்­றி­னையே தூற்­று­வார்கள். பொலி­ஸாரின் நட­வ­டிக்­கை­யினால் நீதி­மன்­றமே தலை குனிவைச் சந்­திக்கும். பொலி­ஸாரின் நட­வ­டிக்கை குறித்து மிகவும் கவ­லை­ய­டை­கிறேன் என்று தெரி­வித்தார்.

பொலிஸார் நேர்­மை­யாக செயற்­ப­டு­வார்­களா!
தந்­துரை இளைஞன் விவ­கா­ரத்தில் பொலிஸார் நீதி­மன்­றுக்கு தயா­ரித்து வழங்­கி­யுள்ள  'பீ' அறிக்கை மிகவும் கடு­மை­யா­ன­தா­கவே இருக்க வேண்டும். அத­னா­லேயே அவ­ருக்கு தொடர்ந்தும் பிணை மறுக்­கப்­பட்­டுள்­ளது.

முக­நூலில் புத்­த­பெ­ரு­மானைப் பற்றி தவ­றான கருத்­து­களை அதன் பார­தூரம் தெரி­யாது அவர்  பதி­வேற்றி விட்டார். அதற்­காக 45 நாட்கள் கடந்தும் தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

ஆனால் இன­வாதம் பேசி நாட்டில் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களின் தீவைப்­புக்கும் கார­ண­மாக இருந்த ஞான­சார தேரர் பிணையில் விடப்­பட்­டுள்ளார்.

அல்­லாஹ்வைத் தூசித்தவர் அவர். நபிகள் நாயகத்துக்கு சவால் விட்டவர் அவர். குர்ஆனைத் தூற்றியவர் அவர். தூசணம் பேசி முஸ்லிம்களை இழிவுபடுத்தியவர் அவர். அவரது நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றிற்கு முதலில் வழங்கிய 'பீ' அறிக்கை மிகவும் பயங்கரமானது.  

நாடே பற்றி எரியும் வண்ணம் அதில் குற்றச்சாட்டுகள் இருந்தன என நீதிவானே அதன் பயங்கரம் தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளார். இந்த 'பீ' அறிக்கையை பொலிஸார் இடையீட்டு மனு ஒன்றினூடாக மாற்றியமைத்து புதிய விடயங்களைப் புகுத்தி விட்டார்கள்.

ஞானசார தேரருக்கு பிணை பெற்றுக்கொடுப்பதற்கான தந்திரமே இது. எது எவ்வாறாயினும் ஞானசார தேரர் பிணையில் வெளியேறி இன்று சுதந்திரமாக இருக்கிறார்.

நீதிபதியின் வார்த்தையில் கூறுவதென்றால் 'நாடே பற்றி எரியும் வகையிலான குற்றச்சாட்டுகளே முதலில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன'.

ஆனால் இன்று ஓர் முஸ்லிம் இளைஞன் முகநூல் பதிவேற்றத்தில் புத்தபெருமானை அவமதித்தார் என்பதற்காக விளக்கமறியலில் நாட்களைக் கடத்துகிறார்.

ஏன் இந்த வேறுபாடுகள் காவி உடைக்கு விசேட சலுகையா!

Comments