காத்தான்குடியில் வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்

Ihzana Fareed

காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள் மற்றும் வீதி இணைவுப் பகுதிகளை சீர் செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கின் வேண்டுகோளுக்கமைவாக அவரின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, காத்தான்குடி ஊர் வீதியுடன் வந்து இணையும் உள்ளக வீதிகளின் இணைவுப் பகுதிகளிலுள்ள ஏற்றத்தாழ்வுகள் சீர்செய்யப்பட்டதோடு, மில்லத் பாடசாலை முன்புறம் உள்ளிட்ட சில இடங்களில் வீதி வேகத்தடை அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Comments