முஸ்லிம் கூட்­ட­மைப்பு என்ற பெயரில் மு.கா.வுடன் மோத முயற்­சிக்­கின்­றனர்


வவு­னி­யாவில் அமைச்சர் ஹக்கீம்
கட்­சி­யி­லி­ருந்து பிரிந்­து­சென்ற சில­ர் அர­சியல் பிழைப்­புக்­காக முகாம்­களை தேடிக்­கொண்­டி­ருந்­தனர். அவர்­களை சேர்த்­துக்­கொண்டு கூட்­ட­மைப்பு என்ற பெயரில் முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் மோதலாம் என்று பார்க்­கின்­றனர்.

அவர்கள் எல்­லோரும் ஒன்­று­சேர்ந்­தாலும் இந்த சாம்­ராஜ்­யத்­துக்கு ஒரு­போதும் சவால்­விட முடி­யாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வவு­னியா மாவட்­டத்­தி­லுள்ள சின்­னப்­பள்­ளிக்­குளம், கோவில்­குளம் தமிழ் மகா வித்­தி­யா­லயம், மடுன்­கந்தை சிங்­கள மகா வித்­தி­யா­லயம், வவு­னியா கல்­வி­யியல் கல்­லூரி, பட்­ட­னிச்சூர் முஸ்லிம் மகா வித்­தி­யா­லயம் மற்றும் சாலம்­பைக்­குளம் போன்ற இடங்­களில் குடிநீர் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரங்­களை வழங்­கி­வைத்த பின்னர், ஆண்­டியா புளி­யங்­கு­ளத்தில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மாலை நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 
எனது வவு­னியா வரு­கைக்கு பயந்து, பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருக்­கி­றார்கள். காட்­டுத்­தர்பார் அர­சியல் நடத்­தி­னால்தான் தனக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மென நம்­பிக்­கொண்­டி­ருப்­ப­வர்­களின் பித்­த­லாட்­டங்­க­ளுக்கு விரைவில் முடிவு கட்­டப்­ப­ட­வேண்டும்.

முல்­லைத்­தீவில் நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்­திக்­குழு கூட்­டத்தில் வட மாகாண முத­ல­மைச்­ச­ருடன் தேவை­யில்­லாமல் பிரச்­சி­னைப்­பட்­டுள்­ளார்கள். முத­ல­மைச்சர் வெளி­ந­டப்பு செய்­கின்ற அள­வுக்கு பிரச்­சினை ஏற்­ப­டுத்­த­வேண்­டிய எந்த அவ­சி­யமும் அங்கு இருக்­க­வில்லை. வடக்­கி­லுள்ள தமிழ், - முஸ்லிம் உறவில் விரி­சலை ஏற்­ப­டுத்­து­வதில் வரிந்­து­கட்­டிக்­கொண்டு செயற்­ப­டு­கின்ற வேலைதான் இது.

வீண் வம்­புக்கு அர­சியல் செய்­வது சில­ருக்கு கைவந்த கலை­யாக இருக்­கின்­றது. சண்­டையை ஆரம்­பிக்கும் நோக்­கத்­தில்தான் அவர்கள் வரு­கி­றார்கள். ஏன், எதற்கு சண்­டையை ஆரம்­பிக்­கிறோம் என்று அவர்­க­ளுக்கே தெரி­யாது. சண்­டையை கிளப்பி, மறுநாள் அது பத்­தி­ரி­கையில் கொட்டை எழுத்தில் வர­வேண்டும் என்­ப­துதான் அவர்­க­ளு­டைய நோக்கம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் மோது­வது தனக்கு ஒரு தகுதி. அது தன்னை உயர்த்­தி­விடும், மக்கள் மத்­தியில் பெரிய பிர­பல்­யத்தை கொண்­டு­வரும் என்று நினைக்­கின்ற கேவ­ல­மான இந்த அர­சியல் செயற்­பாடு மிகவும் ஆபத்­தா­னது. வடக்கில் தமிழ், முஸ்­லிம்­க­ளி­டையே சிறு­சிறு பிரச்­சி­னைகள் இருந்­தாலும், அதில் குளிர்­காய்­வ­தல்ல எமது நோக்கம். அதற்கு தீர்­வு­கா­ண­வேண்டும்.

இரு சமூ­கங்­க­ளி­டையே தேவை­யில்­லாமல் சங்­க­டங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றார்கள். நான் மக்­க­ளுக்­காக போரா­டு­பவன் என்ற பெயர் பத்­தி­ரி­கையில் வர­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் மாத்­தி­ரம்தான் இப்­ப­டி­யான கூத்­து­களை நடக்­கின்­றன. ஆரம்­பித்த பிரச்­சி­னைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. 

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து காட்டை அர­சி­யல்­வா­திகள் அழிக்­கிறார் என்ற விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரங்கள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்றை நாங்கள் தீர்த்­து­வைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொள்­கின்­ற­போது, அவர்­க­ளு­டைய கட்­சிக்­கா­ரர்­களை கொண்­டு­வந்து கூட்டம் நடத்­த­வி­டாமல் குழப்­பு­கின்ற வேலை­களை செய்­தனர். யார் மூல­மா­க­வா­வது தீர்வு கிடைக்­கட்டும் என்­றில்­லாமல், தங்கள் மூலம் மட்­டுமே தீர்வு கிடைக்­க­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் இப்­ப­டி­யான வேலை­களை செய்­கின்­றனர்.

சில்­ல­றைத்­த­ன­மான, கேவ­ல­மான, அசிங்­க­மான ஒரு அர­சியல் இந்த மண்ணில் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கி­றது. முல்­லைத்­தீவில் நடந்த விட­யத்தில், தமிழ் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு பங்­கி­டு­வ­தற்கு தாரா­ள­மாக காணிகள் இருக்­கின்­றன. ஆனால், கூட்­டத்தில் வேண்­டு­மென்றே குழப்­பத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றனர்.

வடக்கு முத­லமைச்;சர் கடும்­போக்­காளர் என்று தெற்கில் கதை பர­வு­கின்ற நிலையில், முத­ல­மைச்சர் வெளி­ந­டப்பு செய்­கிறார் என்­பதை போட்­டுக்­கொ­டுப்­ப­தற்கும், உரி­மைக்­காக போரா­டு­ப­வ­ரா­கவும் தம்மை காட்ட முயல்­கின்­றனர்.

பக்­கு­வ­மில்லால் ஆர­வார அர­சியல் செய்து பழ­கிய இவர்கள், மக்கள் உரி­மைக்­காக போரா­டு­கிறோம் என்று சொல்­லிக்­கொண்டு திரி­கின்­றார்கள். இப்­படி கேவ­ல­மான, பிழைப்­பு­வாத அர­சியல் செய்­ய­வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு கிடை­யாது. சாணக்­கி­ய­மாக, சகோ­தர தமிழ் சமூ­கத்­தையும் அர­வ­ணைத்­துக்­கொண்டு நாங்கள் செல்­கிறோம்.

நியா­யங்­களை பேச­வேண்­டிய இடங்­களில் பேச­வேண்டும். காட்டு தர்பார் நடத்­து­வ­து­போல கூட்டம் நடத்­த­மு­டி­யாது. அப்­படி நடத்­து­வ­தால்தான் தனக்கு அங்­கீ­காரம் கிடைக்­கு­மென்று நினைத்­துக்­கொண்­டி­ருக்­கிறார். இந்தப் பித்­த­லாட்­டங்­களை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. மிகவும் கேவ­ல­மான இந்த கலா­சா­ரத்­துக்கு முடி­வு­கட்­டப்­பட வேண்டும். 

மாங்­குளம் பகு­தி­யி­லுள்ள சிட்­டுக்­குளம் பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அபி­வி­ருத்­தி­களை மக்­க­ளிடம் கைய­ளிக்­கிறோம், அதன்­போது அவர்­க­ளுடன் பேசு­கிறோம். சில பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண்­கிறோம்.

அதனைத் தடுப்­ப­தற்­காக மேற்­கொள்­கின்ற முயற்­சிகள் மிகவும் அசிங்­க­மா­னது. அர­சியல் செய்­கிறோம் என்ற பெயரில் தனிக்­காட்டு தர்பார் நடத்­த­வேண்டாம்.

வவு­னியா மாவட்­டத்தில் சுத்­த­மான குடி­நீ­ரின்­மையால் சிறு­நீ­ரக நோயினால் பாதிக்­கப்­பட்ட பலர் இருக்­கின்­றனர். மூன்று கிரா­மங்­க­ளுக்கு குடி­நீரை சுத்­தி­க­ரித்து வழங்­கக்­கூ­டிய இயந்­தி­ரங்­களை இன்று உங்­க­ளுக்கு வழங்­கி­யுள்ளோம். இது­வொரு தற்­கா­லி­க­மான ஏற்­பா­டு­கள்தான். வீடு வீடாக குடி­நீரை வழங்­கு­வ­தற்­கான குழாய்நீர் விநி­யோ­கத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக திட்­டங்­களை நாங்கள் தற்­போது மேற்­கொண்­டி­ருக்­கிறோம் என்றார்.

2000 மில்­லியன் ரூபா செலவில் உலர் வலய நகர நீர் வழங்கல் திட்­டத்தில் ஒரு பகு­தியை அண்­மையில் பிர­தமர் தலை­மையில் மன்­னாரில் ஆரம்­பித்­து­வைத்தோம். இத்­திட்டம் புத்­தளம், சிலாபம், வவு­னியா ஆகிய பிர­தே­சங்­க­ளிலும் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. வவு­னியா மாவட்­டத்தில் 12,000 குடும்­பங்­க­ளுக்கு நீர் வழங்­கக்­கூ­டிய திட்­டத்தை இன்னும் ஓரிரு மாதங்­களில் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

பாவற்­கு­ளத்­தி­லுள்ள நீரைப் பெற்றும் இன்னும் 25,000 பேருக்கு நீர் வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் நடந்துகொண்டிருக்கின்றன. மல்வத்து ஓயா இரண்டாம்கட்ட வேலைகள் பூர்த்தியானதும், எல்லாம் சேர்த்து மொத்தமாக 60,000 பேருக்கு குடிநீர் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.

அன்றைய தினம் வவுனியாவிலுள்ள புலிதரித்த புளியங்குளம், செல்வநகர் ஆகிய பிரதேசங்களில் குடிநீர் வழங்கல் திட்டத்துக்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச். ரயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாரூக், எம்.பி. பாரூக், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் மாஹிர், வட மாகாண பிரதி பொது முகாமையாளர் உமர் லெப்பை, அமைச்சின் மேலதிக செயலாளர் நபீல், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments