கட்டாரில் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை.!
எந்த அளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க ராஜ்ஜியமாக கட்டார் அமைந்துள்ளது. எனவே அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை யகத்தில் இடம்பெற்ற அக்கட்சியின் இளைஞர் அணி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்டார் நாடு எந்த அளவிலான அழுத்தங்கள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு முகம்கொடுக்கும் சக்திமிக்க நாடாக இருக்கின்றது. எனவே, அங்கு பணியாற்றும் இலங்கையர்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் ஏற்படாது.
தற்போதும் அந்த நாட்டிற்கான பணியாளர்கள் இலங்கையிலிருந்து சென்றவண்ணமே இருக்கின்றார்கள். எனவே அச்சுறுத்தலான நிலைப்பாடொன்று அந்நாட்டில் தற்போதைக்கு இல்லை.
அந்த நாட்டிற்கு மேற்கொள்ளப்படும் விமான சேவைகளிலும் தற்போதும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. வழமை போலவே அந்தச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே இலங்கை பணியாளர்கள் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.


Comments
Post a Comment