மைத்திரியைக் கொல்ல முயற்சி செய்த பெண்ணுக்குச் சிறை!
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக கடமையாற்றிய 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து அவரைத் தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் கொலை செய்யத் திட்டமிட்டோருக்கு இடவசதிகள் செய்து கொடுத்த குற்றத்தின் பேரில் வவுனியா பகுதியை சேர்ந்த 62 வயதான செல்வகுமார் வேலமணி என்ற பெண்ணுக்குப் பத்தாண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடக் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பெண்ணிற்கு 25 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாத காலத்திற்கு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Comments
Post a Comment