இறைச்சிக்காக மாடுகளை விற்க தடையில்லை: இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
இறைச்சிக்காக மாடுகளை விற்க இந்திய மத்திய அரசு பிறப்பித்துள்ள தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் உள்ளிட்ட உயிரினங்களை சந்தைகளில் விற்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசு திடீர் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை தாற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே இவ்விவகாரத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மாட்டுக்கறி விவகாரத்தில் மத்திய அரசு எடுத்து வரும் தவறான முடிவுகள் நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறிப்பாக முஸ்லிம்கள், தலித்துகள் குறிவைத்து தாக்கப்பட்டுவரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கவனிக்கத்தக்கது.

Comments
Post a Comment