உச்சக்கட்ட கோபத்தில் மைத்திரி!
கடந்த அரசாங்க காலத்தில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டிருந்தால் தொழிற்சங்க தலைவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பாடசாலை ஒன்றை திறந்து வைத்த ஜனாதிபதி, கடும்தொனியில் உரையாற்றினார்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் சிலர் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் விழிப்புணர்வற்ற நிலையில் செயற்படுகின்றனர்.
இலங்கையின் நிலப்பகுதியில் ஒரு அங்குலமேனும் வெளிநாட்டிற்கு விற்பனை செய்யப்படாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.
பெற்றோலியத் துறையின் சகல நடவடிக்கைகளையும் அத்தியாவசிய மக்கள் சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு தொழிலை இழக்க வேண்டாம் என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வற்ற நிலையில் செயற்படும் சிலரினால் நாட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment