நீண்ட கால வரட்சியின் பின் திருகோணமலையில் கடும் மழை


நீண்ட கால வரட்சியின் பின் திருகோணமலையில் கடும் மழை பெய்துள்ளது இன்று (27) மாலை கடும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.

இது திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் நீண்ட கால வரட்சியான காலநிலையினைத் தொடர்ந்து பெய்தமையினால் மக்கள் பெரிதும் சந்தோசமடைவதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாய நிலங்கள் கால்நடை வளர்ப்புக்கான நீர் மழை மூலமாக கிடைக்கப்பெற்றுள்ளமை நீண்ட கால வரட்சியின் பின் விவசாயிகளுக்கு கிடைத்த வரமாகவும் மக்கள் கருதுகின்றனர்.

இம்மழை கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை,முள்ளிப்பொத்தானை உள்ளிட்ட பல இடங்களிலும் பெய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments