இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல – யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்
யாழ். துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
நீதிபதியின் மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தற்போது என்னால் சொல்ல முடியும்...
நீதிபதிக்கு உயிர் அச்.சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதியும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்ப்பாதுகாவலரும், மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை பார்த்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதியாக இருந்திருந்தால் நேராக சுட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே எனத் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment