முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தும் பெண் காழி நீதிபதிகள் தேவையில்லை

தமிழ் வின் 

இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளில் பெண் காழி நீதிபதிகள் தேவையில்லை என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாபா சல்மா ஹம்சா தெரிவித்துள்ளார்.

காத்தான்குடியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நான் அமெரிக்க தூதுவரிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளில் பெண் காழி நீதிபதிகள் தேவையில்லை என நான் வலியுறுத்துவதுடன், பெண்கள் சம்பந்தமான விடயங்கனை விசாரிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் பெண்களை நியமிப்பது பொருத்தம்.

அதில் சில பகுதிகள் சரீஆவின் வரையறைக்குள் நின்று திருத்தப்பட வேண்டும். எமது அமைப்பானது கடிதம் ஒன்றை திருத்த சபையிலுள்ள சகோதரர் சலீம் மர்சுக் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் அனுப்பியுள்ளோம்.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி அன்று அமெரிக்க தூதுவர் அதுல் கெஸாப் சில முஸ்லிம் பிரதிநிதிகளை மட்டக்களப்பில் வைத்து சந்தித்ததாகவும் அதில் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான திருத்தம் தேவையாகவுள்ளது.

அதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அமெரிக்க தூதுவரை வலியுறுத்தியதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் டிவிட் செய்தி வெளியிடப்பட்டிருந்தார். இது தொடர்பாக என் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க தூதுவரினால் அன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் முஸ்லிம் சமூக பிரிதிநிதிகளை சந்திப்பதாகவும் அதில் என்னையும் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க தூதவரலாயத்தில் இருந்து அழைப்பு வந்தது.

அங்கு நான் சென்ற போது என்னைத் தவிர ஒரே அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் காணப்பட்டார்கள் மற்றும் கருத்தியல் வாதங்களில் ஒரே கருத்துள்ளவர்களும் காணப்பட்டார்கள்

அப்போது நான் அங்கிருந்த அமெரிக்க தூதரக இணைப்பாளரிடம் சென்று இது தொடர்பாக கூறினேன். அதற்கு அவர் இல்லை இது ஒரு பொதுவான கலந்துரையாடல் கருத்துச் சுதந்திரம் மதிப்பளிக்கப்படுகின்றது என தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக விவாகரத்து தொடர்பாக அமெரிக்க தூதுவரிடம் கருத்து தெரிவித்தவர்கள் சிலருடைய குற்றச்சாட்டு எமது இளம் வயது திருமணம் மற்றும் பலதார திருமணம் விவாகரத்து அதிகரித்து செல்லல் என்பன கூறப்பட்டு அவைகள் மாற்றப்பட வேண்டும் என்றார்கள்.

அந்த விடயம் தொடர்பாக குறுக்கிட்டு கருத்து தெரிவித்த நான் அவ்வாறு எல்லா விடயங்களையும் பொதுப்படையாக பார்க்கப்பட முடியாது என்று தெரவித்தேன். பெண் காழி நீதிபதி நியமனம் தொடர்பாகவும் எனது அதிருப்தியை வெளியிட்டேன்.

ஒரு தூதுவரிடம் முன்னால் கருத்து தெரிவிக்க ஒருவருக்கு தரப்படும் நேரம் மற்றும் சபை ஒழுங்குகள் வித்தியாசம் அங்கு இருந்த சகலரின் கருத்துகள் கேட்பதற்காக இவ்வாறாக ஏற்பாடு செய்வார்கள் அந்த அடிப்படையில் எல்லா கருத்துகளுக்கு விடையளிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இலங்கையிலுள்ள தற்போதைய அமெரிக்க தூதுவர் தான் எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் தற்போதைய இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக முதலாவதாக கருத்து தெரிவித்தவர்.

நான் நேரடியாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்களை நீங்கள் திருத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் நான் தெரிவிக்கவில்லை.

நான் எப்போழும் காத்தான்குடி ஜம்மியத்துல் உலாம சபை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் உதவியோடு அவர்களின் ஒத்துழைப்போடு இந்த பிரதேசத்தில் பல வேலைத்திட்டங்களை எமது சரீஆவுக்கு கட்டுப்பட்டு செய்து வருகின்றேன்.

முஸ்லிம் விவாக சட்ட திருத்தம் தொடர்பில் நான் அந்த யாப்பு திருத்த சபையிலுள்ள சகோதரர் சலீம் மர்சுக் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு இச்சட்டத்திலுள்ள பல விடயங்கைள தூரநோக்கோடு பார்க்கின்ற போது திருத்தப்பட தேவையில்லை.

பெண் காழி நீதிபதிகள் தேவையில்லை என்றும் பெண்கள் சம்பந்தமான விடயங்கனை விசாரிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் பெண் நியமிப்பது பொருத்தமென்றும் மேலும் அதில் சில பகுதிகள் சரீஆவின் வரையறைக்குள் நின்று திருத்தப்பட வேண்டும் என்று எமது அமைப்பானது கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.

நான் ஏறத்தாழ 15 வருடங்ஙளுக்கு மேலாக இப்பிரதேசத்தில் தனிப்பட்ட. ரீதியாகவும் அமைப்பு ரீதியாக சமூக சேவையில் ஈடுபடபடு வருகின்றேன்.

அந்தவகையில் இன நல்லுறவை முஸ்லிம் தமிழ் பெண்களிடையே ஏற்படுத்தல் கல்வி சுகாதாரம் வாழ்வாதாரம், கட்டுமானப் பணிகள் (வீடு, மலசகூடம், கிணறு) போன்ற சேவைகளை செய்து வருகின்றோம்.

விசேடமாக தந்தையை இழந்த பிள்ளைகள் கணவனை இழந்த பெண்கள் போன்றவர்களின் நலன் கருதி பல்வேறு செயற்திட்டங்களை செய்து வருகின்றோம்.

பெண்களுக்கான தொழுகை மண்டபங்களை காத்தான்குடியிலும் மட்டக்களப்பிலும் அமைத்துள்ளோம்.

மேலும், செயற்திட்டங்களை அமுல் படுத்தும் போது நாங்கள் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படவில்லை.

குறிப்பாக எமது பிரதேசத்திற்கு எவ்வாறான களங்கத்தினையும் ஏற்படுத்தவில்லை எனவும் அவர் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாபா சல்மா ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.

Comments