செம்மறி ஆடு உற்பத்தித் துறையை விருத்தி செய்ய செம்மறி ஆடுகள் இறக்குமதி


இலங்கையில் செம்மறி ஆடுகளை (Sheep) உற்பத்தி செய்யும் தொழிற் துறையினை விருத்தி செய்யும் வகையில் செம்மறி ஆடுகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய மிருக வளங்கள் அபிவிருத்தி சபைக்கு 25 ஆண் செம்மறி ஆடுகளையும், 100 பெண் செம்மறி ஆடுகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பீ.ஹெரிசன் முன்வைத்த யோசனைகளுக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதேவேளை, இதற்காக 2017ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 10 மில்லியன் ரூபாவினை பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments