இன்று (முதலாம் திகதி) முதல் தனியார் மற்றும் அரச பஸ்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
தனியார் மற்றும் அரச போக்குவரத்து பஸ்களுக்கான கட்டண அதிகரிப்பு இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது.
6.28 வீத அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக காணப்பட்ட 9.00 ரூபா இந்த புதிய அதிகரிப்புடன் 10.00 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. ஏனைய கட்டணங்கள் 6.28 வீதத்தினால் அதிகரிப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment