விருப்பமில்லாதவர்கள் நல்லாட்சி பஸ்சில் இருந்து இறங்கி செல்லலாம்..


புதிய அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற முடியும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்க்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கு அமைவாக ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள அதேவேளை புதிய அரசியலமைப்புக்கு விமர்சனம் செய்யும் சுதந்திர கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நல்லாட்சி பஸ்சில் இருந்து இறங்கிச்செல்லமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Comments