விசாரணைக்கு முன் ரிசாதின் ‘பொறுப்பு’ நீக்கப்பட வேண்டும்: CaFFE
போதைப்பொருள் இறக்குமதி விவகாரம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட முன்னர் சம்பந்தப்பட்ட அமைச்சரின் தலையீடின்றி விசாரணைகள் சுயாதீனமாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் நிறுவனத்தின் பொறுப்புகள் அமைச்சர் ரிசாதிடமிருந்து நீக்கப்பட வேண்டும் என CaFFE மற்றும் இலங்கை மனித உரிமைகள் மையம் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதைப் பொருள் இறக்குமதி விவகாரங்களில் தொடர்ச்சியாக அமைச்சு மட்டத்திலான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில் இதற்கான சுயாதீன விசாரணைகளை முன்னெடுப்பது அரரசின் கடமையெனவும் இவ்வமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


CaFFEயின் கோரிக்கை நியாயமானதே! அதுதான் சரியான செயற்பாடும்கூட.
ReplyDeleteஇது போன்ற மிக மோசமான நாட்டையும் மக்களையும் பாதிக்கும் விடயங்கள் நடக்கும் போது சம்மந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவது மரபு! இது அமைச்சரின் நேர்மைக்கு சான்றாக அமைவது!