இன்று CID யிற்கு வரமுடியாது என ஷிராந்தி ராஜபக்ஷ அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக முடியாதென அறிவித்துள்ளார்.
தனது சட்டத்தரணி மூலம் அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (27) குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். இன்று காலை 9.00 மணிக்கு அவரை இதில் ஆஜராகுமாறும் கேட்கப்பட்டிருந்தார்.
சிறிலிய சவிய கறக்கட்டளை நிறுவனத்திற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை யோஷித ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில் வாக்கு மூலம் பெறவே அவர் இப்பிரிவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment