யார் இந்த NFGG ! அவர்களின் உண்மை நோக்கம் என்ன ?


நல்லாட்சிக்கான தேசிய முன்னணி NFGG புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவுள்ளதாகவும் செய்திகள் பார்க்கக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ் இது அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

உண்மையில் NFGG கட்சியைப் பொறுத்தவரை சற்று வித்தியாசமான சமுக சிந்தனையுள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஏனென்றால் அங்கு படித்த புத்திஜீவிகளையும் தாண்டி சமுக சிந்தனையுள்ள இளைஞர்கள் உள்வாங்கப்பட்டிருப்பதை அவதனிக்க முடியும்.
அத்தோடு தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்களின் கருத்துக்கள் மக்கள் சந்திப்புக்கள் அரசியல் முன்னெடுப்புகளை அவதனிக்கும்போது மக்களின் பிரச்சினைக்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பது புரிகிறது.

ஆனாலும் அக்கட்சி அரசியல் கட்சியாக அந்தஸ்து கிடைத்தது என்பதில் கட்சி உறுப்பினர்களுக்கு சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எப்போது மக்களின் விடயத்தில் உண்மையாக செயற்படுவார்களோ அப்போதுதான் மக்களுக்கு முழு சந்தோசம் கிடைக்கும் என்பதே உண்மை!

ஆகவே பதவி பட்டங்களுக்குப்பால் நேர்மையாகவும் உண்மையாகவும் உங்கள் பயனம் தொடருமாக இருந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவும் பெருகும் இறைவனும் துணையும் இருப்பான்.

அல்லாது குர்ஆணையும் ஹதிசையும் அடிப்படையாக கொண்டு செயற்படுவதாக செல்லிக்கொண்டு தான் தோன்றித்தனமான சர்வதிகார ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் போன்று செல்லுமாக இருந்தால். எதிர்காலத்தில் உங்களின் இருப்புக்கூட கேள்வியாக்குவான் இறைவன்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் வராமலிருக்க வல்லஇறைவன் பாதுகாப்பானாக.

ஏனென்றால் கடந்த காலங்களில் NFGG தனது அரசியல் பிரவேசத்துக்காக ஒரு கட்சியுடன் சேர்ந்து கொண்டு. இன்னொரு தனி மனிதரை அரசியலிருந்து ஒதுக்குவதற்காக மேற்கொண்ட முன்னெடுப்புகள் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.  

அப்படிப்பட்ட ஒரு குறுகிய பதவி ஆசை கொண்ட சிந்தனை உங்களைப் போன்ற வளர்ந்துவரும் கட்சிக்கு இனிமேலும் வரக்கூடாது என்பதை எத்தி வைக்கிறேன்.

இந்த உலகம் முகமூடி அணிந்தவனை தான் நேசிக்கும், வரவேற்கும். நமது முஸ்லிம் சமுகம்கூட இந்த முகமூடி அரசியல்வாதிகளுக்கு அடிமையாகி திண்டாடிக் கொண்டிருப்பதை காணலாம். அரசியல்வாதிகளும் அதை சாதமாக்கி இலாபம் அடைந்து கொண்டு வருவதையும் மறுக்க முடியாத உண்மை.

அதற்காக நீங்களும் அதை அணிந்து தனது இருப்பை நிலை நாட்டலாம் என்பதை மட்டும் நினைத்து விடாதீர்கள் அது சொற்ப காலத்துக்கே என்பது பொய் முகமூடி கிழியும்போது விழங்கி கொள்வீர்கள்.

எனவே NFGG கட்சியின் அரசியல் யாப்பு எப்படிப்பட்டவை. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை போல் சர்வதிகார ஆட்சியை நடத்தலாம் அவர்தான் மரணிக்கும்வரை தலைவர் என்ற ஒரு யாப்பா? அல்லது சமுகத்துக்கு பிரயோசனம் தரக்கூடிய எல்லோரையும் சேர்ந்து ஒற்றுமையாக பயணிக்க கூடிய யாப்பா?  அதன் கொள்கைகள் என்ன? கட்சி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை தெளிவாக மக்களுக்கு கூற வேண்டும்.

ஏனென்றால் தற்போது முஸ்லிம் கட்சிகளில் உள்ளக பிரச்சினைகள் ஆங்காங்கே அவ்வப்போது வெடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அதை சாதகமாக பயன்படுத்தி.
"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க" நினைத்தால் விழைவு பாரதூரமாக அமையும் என்பதையும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏலவே இருக்கும் கட்சிகளைப் போன்று பதவியும் பட்டமும் மட்டுமே இலக்கு என்ற ஒரு எண்ணத்தோடு. மக்களை பகடைக்காய் போன்று பயன்படுத்த நினைத்தால் நிச்சயம் அதற்கு எந்த சமுக சிந்தனையுள்ள இளைஞர்களும் இடமளிக்க போவதில்லை போகவும் கூடாது. மக்கள் எதிர்பார்ப்பது இதுவல்ல.

தற்போது நாட்டின் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளின் நடவடிக்கை உச்சகட்டதை அடைந்திருக்கும் நிலையில் உங்கள் கட்சியின் வரவு நிச்சயம் நமது அரசியல்வாதிகளுகளை ஒன்று சேர்த்து"அல்லது ஒன்று சேர்ந்து நல்லதோர் சக்திமிக்க பலமுள்ள அரசுக்கு அளுத்தம் கொடுக்கும் அணியாக மாறவேண்டும் என்பதே காலத்தின் தேவையும் மக்களின் எதிர்பார்ப்புமாகும்.

அதற்காக உண்மையாக நேர்மையாக மறுமையை முன்னிறுத்தி செயற்படுங்கள் நிச்சயம் அல்லாஹ்வும் உதவிசெய்வான் உங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு. அப்போது உங்கள் அறைகூவலை ஏற்று இளைஞர்கள் புத்திஜீவிகள் நிச்சயம் ஒன்று சேருவார்கள்  உங்களோடு இன்ஸாஅல்லாஹ்.

ஒலுவில் ஜெலில்

Comments

  1. தேசியம், நல்லாட்சி, சமாதானம், நீதி, நேர்மை போன்றவை சொல்லாடலாகவே கருத்து வெளிப்பாடின்றி மக்கி மறைந்து விட்டதை நல்லாட்சி நல்லாகவே காட்டி விட்டது மக்களுக்கு.

    பதங்களால் மக்களை நீண்ட காலம் மயங்க வைத்திட முடியாது என்பதை, கடந்த தேர்தலுக்கு முன்னர் மக்கள் முஸ்லிம் அரசியல் அபத்தங்களை புறந்தள்ளிவிட்டு தாமே அரசியல் மாற்றத்தை வேண்டி நின்றதன் மூலம் மிகத் துல்லியமாக சொல்லிவைத்து விட்டனர் என்பதை முஸ்லிம் அரசியல் வியாதிகளும், நல்லாட்சி என்ற பெயரில் பொல்லா ஆட்சி நடத்திக் கொண்டிருப்போரும் நினைவிற் கொள்ள வேண்டும்.

    மக்கள் மாற்று வழியாக நடுநிலையான மூன்றாவது தேசிய அரசியல் சக்தியின் பக்கம் தமது நாட்டத்தைத்க் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுவே இன்று இந்த நாடும் வேண்டி நிற்பது, அதன் முன்னோடியாக முஸ்லிம்களே இருக்கப் போகிறார்கள் என்பதே யதார்த்தம்.

    ReplyDelete

Post a Comment