கொள்ளை குழுவில் 15 வயதான பாடசாலை மாணவன்
திட்டமிட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குழு ஒன்றை சேர்ந்த 8 சந்தேகநபர்களை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை பகுதிகளாக பிரித்து போலியான பதிவுகளை மேற்கொண்டு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை குழுவில் ஒரு பெண் மற்றும் 15 வயதான பாடசாலை மாணவனும் அடங்குவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த பெண்ணும், பிரதான சந்தேகநபரும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டு, அதனை பயன்படுத்தி பெண்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலிகளை அறுத்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், புளுனவெவ, குருணாகல், தேவஹூவ, நேகம்பஹா ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment