18 வயது இளைஞன் வீட்டின் அறையில் தற்கொலை . #திருகோணமலை

Ihzana Fareed

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளிப் பிரதேசம் யாட் அடை வீதியில் நேற்று 18 வயதான இளைஞர் ஒருவர் வீட்டின் அறையில் தற்கொலை செய்துகெண்டார்.

காலையில் மகன் வேலைக்கு செல்லாததால் தான் கடிந்து கொண்டதாகவும் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து மகனை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதாகவும் தற்கொலை செய்துகொண்டவரின் தாயார் தெரிவித்தார்.

குறித்த இளைஞர் மதிய வேலையில் அவசரமாக கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டை ஒன்றை கொள்வனவு செய்ய சென்றதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

இறந்தவரின் தொலைபேசி பாதுகாப்பு குறியீடு (Security Lock) பதிவு செய்யப்பட்டுள்ளதனால் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான காரணத்தை அறிவதில் சிரமம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments