ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் 2 ஆம் திகதி


துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை இன்று (22) நாட்டின் எப்பாகத்திலும் தென்படாததனால், ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி அமைத்துக் கொள்ளுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்துள்ளது.
இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக் குழு இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளது.
ஹஜ் பெருநாளுக்கான அரசாங்க விடுமுறை தினமாக கலண்டரில் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 02 ஆம் திகதி சனிக்கிழமை க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் சகல மாணவர்களும் முகம் கொடுக்கும் பொது அறிவுப் பாடமும் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் மாணவர்கள் பெருநாள் தொழுகையை முடித்த கையோடு பரீட்சைக்கு செல்ல வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments