20 இன் பின்னால் தேர்தலை ஒத்திப் போடும் சூழ்ச்சி- மஹிந்த
மாகாண சபைத் தேர்தலை 2019 வரை தள்ளிப் போடுவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரமான ஒரு முயற்சியே 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடாத்த வேண்டும் என்ற ஒரு சட்டமொன்றை, 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தினுடாக அரசாங்கம் கொண்டுவரவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்த வேண்டியிருக்கும் நிலையில் இவ்வாறான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து 2019 ஆம் ஆண்டில் தேர்தலை ஒத்திவைக்க எடுக்கும் முயற்சியே இதுவாகும்.
இதற்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது எனவும் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலும், இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment