தேசிய அரசாங்கம் 2020 வரை நீடிக்கும்

மைத்திரியும் சம்மதம் என்கிறார் ரணில்

தேசிய அர­சாங்­கத்தை 2020 ஆம் ஆண்­டு­வரை கொண்டு செல்­வ­தற்கு தானும் ஜனா­தி­ப­தியும் இணங்­கி­யுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

நாட்டின் கடன் சுமையை தீர்ப்­ப­தற்கு தேசிய அர­சாங்­கத்தை தவிர மாற்று வழி கிடை­யாது. அடுத்த தலை­முறை­யி­ன­ருக்கு கடன் சுமையை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கிரிந்­தி­வெல பஸ் நிலை­யத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்த நிகழ்­வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான ராஜித சேனா­ரத்ன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா உள்­ளிட்ட பலரும் கலந்து கொண்­டனர்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில், தற்­போது தேசிய அர­சாங்கம் கவிழப் போவ­தாகக் கூறு­கின்­றனர். எனினும் தேசிய அர­சாங்கம் கவி­ழந்து விடும் என்று கூறிக் கூறியே இரு­வ­ருடம் நிறை­வ­டைந்து விட்­டது. இனிமேல் இருப்­பது மூன்று வரு­டங்கள் மாத்­தி­ர­மே­யாகும். ஆகவே அர­சாங்கம் கவிழ்ந்து விடும்  என்று கூறி அடுத்த மூன்று வரு­டங்­களும் சென்று விடும். எனவே தேசிய அர­சாங்கம் அடுத்து மூன்று வருடம் வரை பய­ணிக்கும்.

நாம் நாட்டை பொறுப்­பேற்கும் போது பாரிய பிரச்­சி­னைகள் காணப்­பட்­டன. குறிப்­பாக கடன் சுமை அதி­க­ளவில் இருந்­தது. ஆகவே கடன் சுமையை தீர்ப்­பதே எமது நோக்­க­மாகும். கடன் சுமை அதி­க­ரித்து தீர்க்க முடி­யாமல் போய் விடும் என்ற அச்­சத்தின் கார­ண­மா­கவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உடனே தேர்­த­லுக்கு சென்றார். ஜனா­தி­பதி தேர்­தலை இரு வரு­டத்­திற்கு முன்னர் வைப்­ப­தற்கு பிர­தான காரணம் இது­வாகும். 

ஆகவே, நாம் ஆட்­சிக்கு வந்­த­வுடன் கடன் சுமையை தீர்க்க முற்­பட்டோம். தேசிய அர­சாங்­கத்­தி­னாலும் கடன் சுமையை தீர்க்க முடி­யாது என்றே முன்­னைய ஆட்­சி­யாளர் நம்­பினர். எனினும் நாம் அதற்கு மாற்­ற­மாக கடன்­சு­மையை நீக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். கடன் சுமையை தீர்ப்­ப­தற்கு தேசிய அர­சாங்­கத்தை தவிர மாற்று வழி கிடை­யாது. இதன்­கா­ர­ண­மாக இரு பிர­தான கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய அர­சாங்­கத்தை ஆரம்­பித்தோம். 

இந்­நி­லையில் இரு வரு­டங்கள் நிறை­வ­டைந்து விட்­டன. இனி மூன்று வருடங்களே எஞ்சியுள்ளன. தேசிய அரசாங்கத்தை ஐந்து வருடத்திற்கு கொண்டு செல்வதற்கு நானும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பூரணமாக இணங்கியுள்ளோம் என்றார்.

Comments