அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 மில்லியன் இழப்பீடு


அளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று (22) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் நஷ்டயீடாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரம் காரணமாக மூவர் உயிரிழந்ததுடன் 12 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments