மூதூர்: 63 பேரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு
மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வி கற்று தற்போது உயர் பதவிகளை வகிக்கும் 63 பேரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (12) நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. கலாசாலையின் அதிபர் எம்.எம்.கரீம் மௌலவி தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது கலாநிதி, முதுமாணி, கலைமாணி பட்டம் பெற்றவர்களும் அரச திணைக்களங்களில் உயர் பதவி வகிக்கின்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக தென்கிழக்கு பல்கலை கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட பீடாதிபதி எஸ்.எம்.எம்.மஸாகீர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதீதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹீர், கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.ஷெரீப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





Comments
Post a Comment