ஸ்ரீ ல.சு.க. 96 பேரும் ரவிக்கு எதிராக வாக்களிக்க தயார்


முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசாங்கத்திலுள்ள உறுப்பினர்கள் உட்பட 96 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக  மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் புதுக்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு அங்கத்தவர்களை சேர்த்து கொள்ளும் விசேட கூட்டம் கினிகத்தேனை ஹோட்டலில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த அவர் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் அதிகமானோர் வாக்களிப்புக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரனையில் நிச்சயம் வெற்றிபெறுவதாகவும், அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments