வினாப்பத்திரம் வெளியான சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு


உயர்தரப் பரிட்சை இரசாயனவியல் வினாப்பத்திரம் வெளியான சம்பவம் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் கம்பஹா பிரதேசத்தில் பரீட்சை முடிந்து வெளியேறும் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்றில் வினாப்பத்திரத்தில் வந்த 3 வினாக்கள் அவ்வாறே காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த வினாப்பத்திரம் பரீட்சைக்கு முன்னர் வெளியிடப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments