வறட்சி நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் கண்டறியும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அமைச்சர்களான வஜிர அபேவர்தன, அனுர பிரியதர்ஷன யப்பா, மங்கள சமரவீர மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment