சர்ச்சைக்குரிய தேரர் தலைமையில் மட்டக்களப்பில் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பினை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் விசேட மத நல்லிணக்க வழிபாடும் கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றிணைந்து இந்த வழிபாட்டினையும், கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிங்கள - தமிழ் மறுமலர்ச்சிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது பிள்ளையாரடி ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன், பௌத்த வழிபாடுகளும் நடைபெற்றன.
வழிபாடுகளைத் தொடர்ந்து மட்டக்களப்பு மீராவோடை சக்தி வித்தியாலயத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு உட்பட மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்புக்களுக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.




Comments
Post a Comment